நான் தாய் வயித்துல பிறக்கல.. பேய் வயித்துல பிறந்தேன் : இணையத்தை தெறிக்கவிடும் சாமி 2 பட டிரெய்லர்..!

0
529

ஹரி இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள ”சாமி 2” படத்தின் டிரெய்லர் ரிலீசாகி இணையத்தில் வைரலாகி வருகின்றது.(Saamy 2 movie Official Trailer Tamil Cinema)

”சாமி” முதல் பாகத்தைப் போலவே இப்படத்திலும் விக்ரம் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். முந்தைய பாகத்தைப் போலவே இதிலும் ஆக்சன் காட்சிகள் நிறைந்திருப்பது டிரெய்லர் மூலம் தெரிகிறது.

இந்த படத்தில் வில்லனாக பாபி சிம்ஹா நடித்திருக்கிறார். எனவே, படத்தின் மீதான எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது. முதல் பாகத்தில் காமெடி போர்ஷனுக்கு விவேக் நடித்திருந்தார். இரண்டாம் பாகத்தில் சூரி நடித்துள்ளார்.

மேலும், முதல் பாகத்தில் ”நான் போலீஸ் இல்ல பொறுக்கி” என்ற விக்ரமின் வசனம் பிரபலமானது. தற்போது இரண்டாம் பாகத்தில், ”நான் சாமி இல்ல பூதம்” எனப் பேசி மிரள வைக்கிறார் விக்ரம். அதோடு, ”நான் தாய் வயித்துல பிறக்கல, பேய் வயித்துல பிறந்தேன்” என பஞ்சுகளை அள்ளி வீசுகிறார்.

ஏற்கனவே, சிங்கம் மற்றும் அதன் அடுத்த பாகங்களில் கிராபிக்ஸ் காட்சிகளால் மக்களை பயமுறுத்திய ஹரி, இதிலும் அதே மாயத்தைச் செய்துள்ளார். அது மட்டுமே கொஞ்சம் மிரள வைக்கிறது.

மற்றும்படி, ஹரி படங்களுக்கே உரித்தான ஆக்சன், காமெடி, காதல் எதற்கும் இப்படத்திலும் குறையிருக்காது என நம்பலாம்.

மேலும், முதல் பாகம் வெளியாகி, 15 வருடங்களுக்குப் பிறகு உருவாகி இருக்கும் சாமி-2 படத்தின் டிரெய்லர் விக்ரம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

படம் வெளியான சில மணி நேரங்களிலேயே 4.5 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் டிரெய்லரை பார்த்து ரசித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Video Source : Bollywood Avenue Trailers

<MOST RELATED CINEMA NEWS>>

வாணி ராணி நடிகை விபச்சார வழக்கில் கைது : அதிர்ச்சியில் சின்னத்திரை திரையுலகம்..!

விஸ்வாசம் படத்தில் அஜித்துடன் நடிக்க மறுத்த சந்தானம் : ஹீரோ ஆகிட்டாலே மவுசு தான் போல..!

ஐபிஎல் சூதாட்டம் : நடிகர் சல்மான் கானின் சகோதரருக்கு போலீசார் சம்மன்..!

இந்தியாவின் இன்னிசைத் துடிப்பைத் தீர்மானிக்கும் ஒப்பற்ற கலைஞர் : இசைஞானிக்கு புகழ்மாலை சூட்டிய குடியரசுத் தலைவர்..!

அம்மன் தாயி ஆக இரட்டை வேடத்தில் கலக்கும் பிக் பாஸ் ஜூலி..!

போதைப் பொருள் வழக்கில் கைதான பெண்ணுக்காக டிரம்ப்பிடம் வாதிட்ட கிம் கர்தாஷியான்..!

மீண்டும் சினிமாவில் களமிறங்க தயாராகும் பாலியல் சர்ச்சை நடிகை..!

அப்பா என்றாலும் வயதுக்கு வந்த மகளுடன் இப்படியா.. ? : அமீரை விளாசித்தள்ளும் மக்கள்..!

இணையத்தில் சக்கைப் போடு போடும் கடைக்குட்டி சிங்கம் பட டீசர்..!

Tags :-Saamy 2 movie Official Trailer Tamil Cinema

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here