சல்மான்கானை கொலை செய்ய முயற்சி : அதிர்ச்சியில் திரையுலகம்..!

0
207
Salman khan murder attack Dada arrested,Salman khan murder attack Dada,Salman khan murder attack,Salman khan murder,Salman khan

அரிய வகை மான்களை வேட்டையாடிய வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டு ஜாமீனில் வந்துள்ள நடிகர் சல்மான்கானை கொலை செய்ய முயற்சித்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.(Salman khan murder attack Dada arrested)

சன்மான்கான், சில சர்ச்சை படங்களில் நடித்தும் எதிர்ப்புகளுக்கு உள்ளானார். இந்தி நடிகைகள் சிலருடனும் இணைத்து கிசுகிசுக்கப்பட்டார்.

இந்நிலையில் இவருக்கு வந்த மிரட்டல்கள் காரணமாக, வெளிநிகழ்ச்சிகளுக்கும், பட விழாக்களுக்கும் பாதுகாவலர்கள் துணையுடனேயே வருகிறார். பொது நிகழ்ச்சிகளுக்கு வரும்போது போலீசாரும் அவருக்கு பாதுகாப்பு அளிக்கிறார்கள்.

இந்நிலையில், சல்மான்கானை கொலை செய்யும் முயற்சியில் ஈடுபட்ட பயங்கர தாதாவை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.

கைதான தாதாவின் பெயர் சம்பத் நெஹ்ரா. அரியானாவை சேர்ந்தவன். இவன் மீது ஏராளமான கொலை மற்றும் கொலை முயற்சி, கொள்ளை, மிரட்டி பணம் பறித்தல், கடத்தல் உள்பட பல வழக்குகள் உள்ளன. இவன் சில நாட்களுக்கு முன்பு ஐதராபாத்தில் ஆந்திர போலீசாரால் கைது செய்யப்பட்டான்.

அதன் பின்னர் அரியானாவுக்கு அழைத்து சென்றனர். அங்கு அவனிடம் விசாரணை நடத்தியபோது சல்மான்கானை கொலை செய்ய திட்டம் தீட்டி இருந்த அதிர்ச்சி தகவல் வெளியானது.

மும்பையில் உள்ள சல்மான்கான் வீட்டுக்கு சென்று அவரை எப்படி கொலை செய்வது என்று ஆராய்ந்ததாகவும் இதற்காக சல்மான்கான் நடவடிக்கைகளை 2 நாட்கள் நோட்டம் விட்டதாகவும் போலீசாரிடம் தெரிவித்துள்ளான்.

இதைத் தொடர்ந்து, அரியானா போலீசார் அவனை கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். சம்பத் நெஹ்ரா பிரபல ரவுடி லாரன்ஸ் பிஷ்னோ குழுவை சேர்ந்தவன் என்றும் அவன் மீது 12-க்கும் மேற்பட்ட கொலை வழக்குகள் உள்ளன என்றும் போலீசார் தெரிவித்தனர். இது இந்தி பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

<MOST RELATED CINEMA NEWS>>

பிக் பாஸ் 2 போட்டியாளர்கள் இவர்கள் தான் : தன் வாயாலே உளறிய கமல்..!

பாராட்டாமல் இருக்க முடியவில்லை : காதலியை புகழ்ந்து தள்ளிய விஷால்..!

மேலங்கியை விலக்கி நடிகைக்கு தனது மார்பழகைக் காட்டிய அர்ஜுன் கபூர்..!

நடிகர்களாக அவதாரமெடுக்கும் பிரபல இசையமைப்பாளர்கள் : எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..!

நடிகையர் திலகம் படத்தால் என் குடும்பம் பிரிந்தது தான் மிச்சம் : ஜெமினி கணேசன் மகள் காட்டம்..!

கமலின் விஸ்வரூபம் 2 பட ட்ரைலர் வெளியீட்டு திகதி அறிவிப்பு..!

மீண்டும் புதுப்பொலிவுடன் வெளியாகும் ”குயின்” படத்தில் இணையும் மூன்று நாயகிகள்..!

நானியின் மோசமான படங்கள் விரைவில் : மீண்டும் மிரட்டும் ஸ்ரீரெட்டி..!

பிகினியில் கொடி கட்டிப்பறக்கும் பிரபல நடிகையின் புகைப்படங்கள் : அதிர்ச்சியில் ரசிகர்கள்..!

Tags :-Salman khan murder attack Dada arrested

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here