மேடையில் கதறியழுத ஸ்ரீதேவியின் மகள்கள் : சோகத்தில் திரையுலகம்..!

0
1330
Jhanvi Kapoor cried dhadak Movie Trailer,Jhanvi Kapoor cried dhadak Movie,Jhanvi Kapoor cried dhadak,Jhanvi Kapoor cried,Jhanvi Kapoor

தமிழ் மற்றும் ஹிந்தி பட உலகின் ஜாம்பவான், மறைந்த ஸ்ரீதேவியின் மூத்த மகள் ஜான்வி ”தடக்” என்ற இந்தி படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகி உள்ளார்.(Jhanvi Kapoor cried dhadak Movie Trailer)

அண்மையில் இப் படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா மும்பையில் நடந்தது. இதில் ஜான்வியும் அவரது தங்கை குஷியும் கலந்து கொண்டனர். ஸ்ரீதேவியின் கணவர் போனிகபூரும் அவரது உறவினர்களும் வந்து இருந்தார்கள்.

”தடக்” படத்தின் டிரெய்லரை பார்த்ததும் இந்த நல்ல நேரத்தில் அம்மா இல்லையே என்று குஷி மேடையிலேயே அழத் தொடங்கினார். அவருக்கு ஆறுதல் கூறிய ஜான்வியும் கண் கலங்கினார். இதைப் பார்த்த கூட்டத்தினரும் சோகமானார்கள்.

விழாவில் ஜான்வி பேசும்போது.. :-

“மராத்தியில் வெளியான சாய்ரட் படத்தை எனது அம்மா ஸ்ரீதேவி பார்த்து விட்டு இதுபோன்ற ஒரு நல்ல படத்தில்தான் நீ கதாநாயகியாக அறிமுகமாக வேண்டும் என்றார். அதிர்ஷ்டவசமாக அந்த படத்தின் இந்தி ரீமேக்கில் நடிக்கவே எனக்கு வாய்ப்பும் வந்தது.

மேலும், படத்தில் எப்படி நடிக்க வேண்டும். முகத்தில் உணர்வுகளை எப்படி பிரதிபலிக்க வேண்டும் என்றெல்லாம் அவர் ஆலோசனைகள் கூறினார். இந்த நல்ல நேரத்தில் எனது அம்மா இல்லையே என்று நினைக்கும்போது மிகவும் வேதனையாக இருக்கிறது” என்றார்.

”தடக்” படத்தின் டிரெய்லரை பார்த்து போனிகபூரின் முதல் மனைவியின் மகனும் நடிகருமான அர்ஜுன்கபூர் வெளிநாட்டில் இருந்து ஜான்விக்கு வாழ்த்து தெரிவித்து உள்ளார்.

அத்துடன் இந்தி நடிகர்-நடிகைகள் பலரும் ஜான்வியை வாழ்த்திய வண்ணம் உள்ளனர்.

<MOST RELATED CINEMA NEWS>>

சீரியல் கணவன் மனைவிக்கு இடையேயான நிஜ காதல் : சின்னத் திரையுலகில் கிசுகிசு..!

டூ பீஸ் உடையில் வரவேற்பு அறைக்கு வந்த எமி : இன்ப அதிர்ச்சியில் உறைந்த ரசிகர்கள்..!

ஸ்ரீரெட்டியின் தொடர் புகார் : வக்கீல் நோட்டீஸ் அனுப்பிய நானி..!

பெட்ரூம் வரை சென்று புகைப்படம் எடுத்து இணையத்தில் உலவவிடும் இலியானா பாய்பிரண்ட்..!

நான்கு நாட்களில் ஆரம்பமாகவுள்ள பிக்பாஸ் சீசன் 2 : புரோமோ வீடியோக்களினால் பெரும் எதிர்பார்ப்பு..!

நீ என்னுடன் படுக்கவில்லை என சத்தியம் செய் பார்ப்போம் : மீண்டும் நானியை மிரட்டும் ஸ்ரீ ரெட்டி..!

கடைக்குட்டி சிங்கம் படத்தின் நோக்கம் இது தான் : கார்த்தி பேச்சு..!

தடைகளைத் தாண்டி இணையத்தை கலக்கும் விஸ்வரூம் 2 பட டிரைலர்..!

பிகினியில் கொடி கட்டிப்பறக்கும் பிரபல நடிகையின் புகைப்படங்கள் : அதிர்ச்சியில் ரசிகர்கள்..!

Tags :-Jhanvi Kapoor cried dhadak Movie Trailer

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here